மூளையின் திறன்
மூளையின் திறன் மங்காமல் நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும்..!!
Brain Exercises என்று சொல்லப்படுகின்ற மூளை பயிற்சிகளை அவ்வப்போது செய்வதால் நம்முடைய மூளையின் திறன் மங்காமல் நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
அது என்ன Brain exercise? அதில் நிறைய வகைகள் இருக்கின்றன. பல இணையங்களில் குறிப்பிட்டுள்ள ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே பாக்கலாம்.
1. ஒரு அறைக்குள் நடந்து செல்லுங்கள். அந்த அறையை விட்டு வெளிய வரும்போது அந்த அறைகுள் பார்த்த ஒரு 5 பொருட்களை ஞாபகப்படுத்தி பாருங்கள். உங்களால் ஞாபகப்படுத்த முடியவில்லையா? விட்டுவிடாதீர்கள். இன்னும் இரண்டு நிமிடம் யோசியுங்கள்.
கண்டிப்பாக உங்களுடைய மூளை அதனை எதாவது ஒரு ஓரத்தில் பதிவு செய்து வைத்திருக்கும். ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றாலும் அடுத்த முறை நீங்கள் சொல்லாமலேயே உங்களின் மூளை அதுமாதிரியான விஷயங்களை, அதுவாக பதிவு செய்ய ஆரம்பித்துவிடும்.
2. புதிதான மொழிகளைக் கற்பதும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதும் ஒரு வகை மூளை பயிற்சிதான்.
3. ஒரே மாதிரி வேலையை தினமும் செய்யாதீர்கள். ஓருவேளை தினமும் ஒரே மாதிரி வேலையை செய்ய வேண்டியிருந்தால், அதனை வேறு விதமாக செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யும் பொழுது, மூளை செல்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை.
உதாரணமாக உங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு ஒரே பாதையில் நீண்ட நாளாக போய்வருகின்றீர்கள் என்றால், கொஞ்சம் வேறு பாதையில் முயற்சி செய்து பாருங்கள். (ஆனால் உங்கள் வீட்டுக்குத் தான் போகவேண்டும். வித்யாசமாக முயற்சிக்கிறேன் என்று வேறு யார் வீட்டுக்குள்ளேயும் போய் விடக்கூடாது).
4. அவ்வப்போது கொஞ்சம் பழைய நினைவுகளை நினைத்துப் பாருங்கள். இரண்டு வருஷம் முன்னால் நீங்கள் சென்று வந்த ஒரு சுற்றுலாவைப் பற்றியோ, அங்கு நடந்த விஷயங்களைப் பற்றியோ யோசித்துப் பாருங்கள். ஞாபக சக்தியை அதிகப் படுத்துவதற்கான பயிற்சி இது.
5. நீங்கள் சென்று வந்த இடத்தை மட்டுமில்லாமல் உங்களுக்கு பிடித்தமான இடங்களை, நீங்களே கற்பனையில் உருவாக்குங்கள். நீங்களே சொந்தமாக எதாவது கதை எழுதிப்பாருங்கள். உங்களோட கற்பனை திறன் வளர்வதற்கான பயிற்சி இது.
6. செஸ், சுடோக்கு மாதிரியான மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டுக்களை அவ்வப்போது விளையாடுங்கள்.
இவை மட்டும் இல்லை. இன்னும் ஏராளமான brain exercises இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவற்றை முயற்சி செய்து பாருங்கள்.
எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முயற்சியுங்கள்.
இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய சொத்தான மூளையை மங்க விடாமல் காத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment