தெரிந்த ஒரு சில உளவியல் துணுக்குகள் .
அன்பின் தேடல்,பகிர்தல் என்பது மனித குலத்தின் இயல்பு .... அப்போதைய நிகழ்வில் நடக்கும் நிழ்வு சிதறல்களே ..... இப்படியான வருத்தங்களின் காரணகர்த்தா😊
படம்: என் திறன்பேசி
ஒன்று ஒரு நட்போ உறவு தடங்கலற்ற நிறைவான பாதையில் நீடிக்க வேண்டும் என்றால் முதலில் புரிந்து கொள்ளல் அவசியம், பின் விட்டுகொடுத்தல் அவசியம்,அதுவும் நான் தான் , நான் மட்டுமே எப்போதும் விட்டு கொடுக்கிறேன் 😊😊 என்ற உணர்வு இல்லாத விட்டு கொடுத்தல்.
ஏனென்றால் உலகின் அரிய பெரிய ஜோடிகள்,நண்பர்கள்,தொழில் பங்குதாரர்களின் நீண்டகால நட்போ உறவோ ( relationship (or) friend ship ) சிறப்புற செயல் பட மேற்கண்ட 👆👆சித்தாந்தமே முக்கிய காரணி .
ஓரு நட்போ உறவோ ... ஒரு கட்டாய கொள்கை முனைப்பை இருவரும் விட்டொழுத்து 😊❤️🦋யதார்த்தத்தை பின்பற்ற அது நன்கு நீடிக்கும்,மரணத்தை விட கொடியது, போலி அன்பிற்கு அடிமையாக இருந்தோம் என அறியும் தருணம்.
உங்கள் நட்பும், ( அந்த நண்பர் )ஒருவர் மீது வைத்த மரியாதையும் நிஜம் எனும் பட்டசத்தில்,ஒரு சங்கடம் நிகழும் போது அய்யே 🙄இவருக்காகவா நான் அப்படி இருந்தேன் என அங்கலாய்க்க வேண்டியதில்லை, அப்புறம் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் 😊
அது போல ஏதோ ஒரு இடத்தில் தவறான புரிதல் தொடர்ந்து இருக்கும் ,அதன் விளைவு ஏதோ ஓரிடத்தில் ஒருவர் பக்கம் வெடிக்கும்.இன்னொருவருக்கு அது என்னவென்றே புரியாது. ஏன் என யோசிக்காமல் ஈகோ பார்த்தால் பிரிவும் இப்படியாகப் பட்ட வெறுப்புமே மிகும்.😊
அது போல நம் கோபமும் ஆளுமையும் யாதொரு இடத்திலும் நம்மை விட எளியவர்களிடமே வெளிப்படுகிறது...வலியவர்களிடம் அல்ல ... அவர்களிடம் அனுசரித்து போகிறோம் ... அதையே அனைவரிடமும் நடைமுறை படுத்தினால் ...
உறவுகள் பலப்படும் ...😊
அது போல் சிலருக்கு ஒரு சுபாவம் ஒருவருக்கு உதவி செய்து விட்டால் .... அவர்கள் நம் சொல் பேச்சு கேட்க வேண்டும் என.... அதுவும் உறவு ( Relationship) பலகீனபட காரணம்😊
மற்றொன்று எதிர்பார்புகள் அற்ற நட்பு, உறவு 🦋🙏🏻அது நலம் 😊அப்போது யார் கோபித்தாலும் நமக்கு பாதகம் இல்லை.
அதுபோல எளியகோபம் அற்ற நாகரீக புரிதல்கள், ஒருவர் 2,3 முறை (அ) 2,3 நாட்கள் உங்கள் தொலைபேசி அழைப்பை தவிர்ப்பது (அ) குறுஞ்செய்திக்கு பதில் சொல்லாமல் இருப்பது,இதை 2 வகையாக எடுத்துக் கொள்ளலாம் ஒன்று அவர் ஏதோ மிக முக்கிய வேலையில் இருக்கிறார் (அ) நிஜமாகவே தவிர்க்க நினைக்கிறார் ... (அ) வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு அவரே (He & She )பேசுவார் .. அப்படி தவிர்த்த ஒருவர் பல வாரங்களோ மாதங்களோ கழித்து உங்களை அழைத்தால் ... நீங்கள் அதற்கும் மதிப்பு கொடுத்து பதில் அளியுங்கள் ... அப்பொழுது தான் நீங்கள் பக்குவபட்டவர்கள் என அர்த்தம் ... இது தான் உறவு ( நட்பு ) சிக்கல்களை,களைய மிகச் சிறந்த வழி ...😊
மனிதனுக்கு மரியாதையும் , சுயகௌரவமும் அவசியம் தான் இருந்தாலும் எந்த ஒரு நட்பையும் உறவையும் நிலை நாட்ட ஒரு படி கீழ் இறங்கி செல்ல தயங்காதீர்கள். 😊
உறவோ நட்போ ஒருவருடன் பழக ஆரம்பித்து விட்டால் .. அவர்களின் இயல்புபடி,அப்படியாகவே மாறி விடுங்கள் , அதனால் தவறு ஒன்றும் இல்லை ..உறவின் நட்பின் பாலம் வலுக்க ஓரு அங்கீகரிக்கப்பபட்ட நடைமுறையே இது😊
ஏதோ ஒரு விஷயத்தில் ஒருவர் நம்மை தவறாக புரிந்து கொண்டு நம்மிடமோ, நம்மை பற்றி மற்றவரிடமோ, ஏதும் குறை கூறினால். அவர்களுக்கு அதை புரிய வையுங்கள், எப்படி என்றால் அவர்களை. தூக்கி வீசாமல் நீங்கள் எவ்வளவு உயர்வான இடத்தில் என் மனதில் இருக்கிறீர்களே .. என அவர்கள் மீதான உங்களின் மதிப்பீட்டை புரிதலுடன் சொல்லி விளக்குங்கள்😊
அதற்கு மேலும் அவருக்கு புரியவில்லை எனில் ஓரு புன்னகையோடு அதை கடந்து செல்லுங்கள்😊🌸😊
ஏனென்றால் அவருள் பதிந்த தவறான கருத்து பிரிதொரு சமயத்தில் விலகும் .. அதற்கொரு சந்தர்ப்பம் அளிப்போம் .
நானெல்லாம் சில சமயங்களில் அதிர்ந்து,அதிசயித்து இருக்கிறேன், யாராவது ஓருவர் என் மீது கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் அவர்கள் என்னிடத்திலோ பிறிதோர் இடத்திலோ அவர்கள் வெளிப்படுத்தும்போது...😊நாம் அவரை ஏனாதானாவென கூட நினைத்திருப்போம்.
வாழ்க்கை பல நிலைகளை கொண்டது ... புகழுக்கு மயங்காமல் 😊.. இகழ்வுக்கு 😊சோர்வடையாமல் , தாழ்வுக்கு தலை குனியாமல் உயர்வுக்கு அகந்தை ( கர்வம் ) கொள்ளாமல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளாமல் ..பிறர் தாழ்வு கண்டு இகழாமல் வாழ்ந்தாலே போதும் 😊
காட்டாற்று வெள்ளத்தை கை கொண்டு கரை போட்டு திருப்ப முடியாது, அது போல அதன் அதன் வழி படி விட்டே உறவு ( Relationship ) பாலங்களை பலப்படுத்த வேண்டும்..எதையும் கட்டுபடுத்த நினைத்தால் அதன் புதிய போக்கு உறவு ( Relationship) பாலத்தின் கட்டமைப்பை பலகீனபடுமே தவிர பலம் கொண்டு உறவில் (Relationship )தென்றல் வீச செய்யாது ...
அது போல உங்கள் மனத்திற்கினயாதாகவே நடக்க யாரையும் எந்த காரணத்தை வைத்தும் .. கட்டாய படுத்தாதீர்கள். உங்கள் மகனோ, மகளோ , உறவோ ,நட்போ, யார் ஒருவருக்குமான உங்களின் மீதான அன்பு ... இயல்பான சுயம்புவாக இருக்க வேண்டுமோ தவிர .. அது கட்டாயத்தின் வெறுப்பாக பாவனையாக 😊இருக்க கூடாது ....
கட்டாயத்தால் கிடைக்கும் அன்பு நிலையற்றது.😊நிஜம் இல்லாதது😛
உதாரணமாக குழந்தைகளை பெற்று வளர்த்தோம் உங்களை அதனால எங்கள சொல் படி நடக்கவும் என பெற்றோரும்,உறவு நட்புகளை நான் இப்படி செய்தேன் அப்படி செய்தேன் .. என் சொல் படி கேள் ... கணவர் மனைவிடம் நான் சாம்பாரிக்கிறேன் என் பேச்சை கேள் ..மனைவி கணவரை என் தந்தை நிறைய செய்துள்ளார் என் பேச்சை கேளுங்கள் என ஒரு ஒருவரும் 😊இப்படி கட்டாய படுத்துவதால் அங்கே நிலவுவது போலியான நிலையற்ற அன்பே ..
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதே சிறப்பு, ஆனால் அப்படி இருப்பது கடினம் சில விஷயங்களை அலசி ஆராயாமல் விட்டுவிட்டால் அதுவே சரியாகிவிடும் அல்லது நமக்கு பழகிவிடும்.புரிந்துகொள்ளல் மற்றும் விட்டுக்கொடுத்தல் இதுமட்டும் இருந்தால் எல்லா இடங்களிலும் வெற்றி பெறலாம்!!!
ஒரு உறவுக்கோ ,நட்புக்கோ ஏதோ ஒரு சிறிய உபகாரம் செய்து விட்டு ..... அவர்கள் உங்கள் விருப்பப்பட எல்லாம் நடக்கவில்லை என கட்டாயபடுத்தி மரியாதையை பெறாதீர்கள் .
நீங்கள் இயல்பாக, நிஜமாக இருந்தாலே போது அவைவருக்கும் அனைவரின் போற்றுதலுக்குரிய உயரிய அன்பு கிடைக்கும்😊
அன்பு ஒன்றையே எதற்குமான ஆயுதமாக்குங்கள் ...
ஊதாசீனம்,வெறுப்பு,கோபம்,மதியாமை இவற்றை தூக்கி வீசுங்கள் .... மகிழ்ந்திருங்கள்😊
வாழ்க்கை வண்ண மயமானது ... உங்கள் மனது வருத்தப்பட நடந்த நிகழ்வுகளை நீங்கள் பிறருக்கு செய்யாமல் தவிர்த்தாலே போதும் ... உறவுகள்,நட்புகள் பலப்படும்.
No comments:
Post a Comment