Monday, June 1, 2020

சித்தர்கள், முனிவர்கள், மகான்கள், சாமியார்கள், குருமார்கள் - ஒவ்வொருவர்க்கும் வேறுபாடுகள்

சித்தர்கள், முனிவர்கள், மகான்கள், சாமியார்கள், குருமார்கள் - ஒவ்வொருவர்க்கும் வேறுபாடுகள்
18 சித்தர்களின் பிறப்பும் மறைவும் | 18 ...
சித்தர்கள்
சித்தர்கள் (Siddhas) என்றால் அடையவேண்டியதை அடையப்பெற்றவர்கள் என்பது ஒரு பொருள். அதாவது இறைநிலை அடைந்தவர்கள்.
சித்தி (Siddhi) எனும்போது சாதாரண மனித சக்திக்கு அதீதமான (அணிமா, மகிமா போன்ற) அஷ்ட சித்திகளைப் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். அவற்றைச் செய்யக்கூடியவர்கள் சித்தர்கள் எனும் பொருளிலும் சொல்லப்படுவதுண்டு. சித்திகள் ஒரு குறிப்பிட்ட தீவிர மன ஒருமைப்பாடு கிட்டும் நிலைகளில் (கடும் தவத்தின் பலனாக) கைவரக் கூடியவை. இறைநிலை அடைவதற்குத் தாழ்ந்த நிலையிலேயே அவை கிட்டும்.
சித்திகள் கிட்டுவது, ஒருவிதத்தில் இறைவனை அடையத் தீவிர சாதனைகள் செய்யும் ஒரு சாதகரின் அறுதிக் குறிக்கோளைக் குலைக்கக் கூடும். சித்திகள் ஒருவனுக்குத் தரக்கூடிய, பெயர், புகழ், பக்தர்கள் கூட்டம், செல்வம் இவற்றில் மயங்கி சிலர் வழி தவறிப்போய்விடுவர்.
இறை நிலை அடைந்தவர், சித்திகளை அவர் விருப்பப்பட்டால், அவசியமெனில் அடியார்களின் நன்மை கருதி மட்டுமே உபயோகிப்பார். சிலர் அவற்றைக் குறித்துப் பாராமுகமாக இருப்பர். அப்படிப்பட்ட சித்தர்/ மகானின் சன்னதியிலே அற்புதங்கள் நிகழக்கூடும். அடியார்கள் தங்கள் அனுபவத்தில் அவற்றைக் கண்கூடாக உணர்ந்து கொண்டாடுவர்; ஆனால் மகானோ தனக்கு அது சம்பந்தம் இல்லாததுபோல் விலகி இருப்பார்.
பகவான் ரமண மகரிஷியிடம் அவரருளால் அப்படி அற்புதம் நிகழ்ந்ததாக பக்தர் சொன்னால் அது "தானாய் நடக்கும் இறைச் செயல்" (Divine automatic action) என்று சொல்லிவிடுவார்!
ஆக, கண்முன்னே சித்திகள் செய்து காட்டி பிரமிக்கச் செய்வதால் மட்டும் ஒருவர் மகானாக இருக்க வேண்டியதில்லை; சித்திகள் செய்யாததால் ஒருவர் இறை நிலை அடையாதவர் என்பதும் இல்லை. இறை நிலை அடைந்தவரும் சில சமயங்களில் அவசியம் கருதி சித்திகள் செய்வதுண்டு ஆதலால், அவர்களை 'சித்தியில் மயங்கிப்போய் திசை மாறிவிட்ட போலிச்சாமியார்' என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது!
முனிவர்கள்
மௌனம் எனும் மூலச் சொல்லிலிருந்து 'முனி' வந்தது. பொதுவாக அதிகம் பேசாமல், தனித்திருந்து தன் சாதனைகள், தவத்தில் ஈடுபடுபவர்களை முனிவர்கள் என்பது சரியாக இருக்கும்.
மகான்கள்
மகத்தானவர்கள், மகா ஆத்மாக்கள் தான் மகான்கள். சாமானிய மனிதனிலிருந்து பலப்படிகள் மேலாய் ஆன்மீக தளத்தில் முன்னேறியிருப்பவர்கள் மகான்கள்/ மகாத்மாக்கள். அவர்கள் இறை நிலை அடையப் பெறவர்களாயும் இருக்கலாம்; அல்லது அதை நோக்கிப் பெருமளவில் சென்றுவிட்டவர்களாயும் இருக்கலாம். அவர்கள் போலிகள் அல்ல.
சாமியார்கள்
'சுவாமி' எனும் பதத்தில் தமிழில் மரியாதைக்காகச் சேர்க்கப்படும் 'ஆர்' வந்து சேரும்போது 'சுவாமியார்' திரிந்து சாமியார் ஆகிறது.
நமது ஆதி சங்கராசாரியர் உண்டாக்கிய 'தசநாமி' எனும் பத்துவித பெயர்களில் முடியும் சம்பிரதாய (கிரி, புரி, தீர்த்தர், சரஸ்வதி, ஆரண்யர்... போன்றவை) சன்னியாசத்தை குருவழியாக முறையாய்ப் பெற்றவர்களை 'சுவாமி' என்று அழைப்பது வழக்கம். ஆக சாமியார் என்பது துறவிகளைக் குறிக்கும்.
ஞானி
தன்னைத் தானே முற்றிலும் உணர்ந்து, எங்கும் நிறை பரமாத்மாவுக்கு அன்னியமாகத் தான் இல்லாததை பூரண அனுபவமாய் அறிந்துவிட்டவர். வழிபடுபவன், வழிபடும் இறைவன் எனும் துவைத நிலையைக் கடந்து அத்துவைத நிலையில் இருப்பவர்.
யோகி
அஷ்டாங்கம் எனும் யோக மார்க்கத்தில், தியானம் வழி நிர்விகல்ப சமாதி எனும் நிலையை அடைந்து அதில் சகஜமாக நிலைபெற்றிருப்பவர்.
குருமார்கள்
குரு, சத்குரு, ஆசாரியர் எனப்படுபவர்கள் நமக்கு ஆன்மீக உபதேசம் தந்தும், (அவசியமெனில்) மந்திர தீட்சை தந்தும், சாத்திர அறிவு தந்தும், ஆன்மீக வழிகாட்டியாய் இருப்பவர்கள். குரு, ஆச்சாரியர் என்பவர்கள் , இறை நிலை அடைந்துவிட்டவராக இருக்கவேண்டும் என்பதில்லை. சத்குரு என்பவர் பூரண சித்தர்; அடைய வேண்டியதை அடைந்துவிட்டவர். அவர் அவதார புருஷராகவும் கூட இருக்கலாம்.
நிச்சயம் வேறுபாடுகள் உண்டு.
சித்தர் - தங்களது உயரிய தத்துவத்தை வெற்றிகரமாக அடைந்தவர்கள்.
முனிவர்கள்- தங்களது நோக்கத்தை அடைய முனைந்துகொண்டிருப்பவர்கள்
மஹான்கள்- உலக நன்மைக்காகப் பல உயர்ந்த செய்கைகளில் ஈடுபடுபவர்கள்
ஸந்ந்யாஸிகள்- உலக ஆசையைத் துறந்து ஸம்ஸாரச் சக்கரத்திலிருந்து விடுபட முயல்பவர்கள்
குருமார்கள் - உயரிய விஷயங்கள் குறித்துத் தங்களை அண்டியோர்க்கு வழி காட்டுபவர்கள்
இம்மூன்று (குரு, சத்குரு, ஆசாரியர்) பதங்களுக்கும் இடையே நுண்ணிய வேறுபாடுகளை (ஆங்கிலத்தில்) தெரிந்துகொள்ள கீழே தந்துள்ள தொடர்பைப் பாருங்கள்:
சித்தர்கள் யோக பயிற்சியின் மூலம் பஞ்சபூதத்தை தன்வசம் செய்து இயற்கைக்கு மாறுபட்ட அதிசயங்களை செய்து காண்பிப்பார்கள் இது மாயைக்கு சம்பந்தமானது இந்த சக்தி உபயோகத்தினால் குறைவாகும்.
முனிவர்கள் மந்திரங்களை பூஜித்து தியானம் செய்து பல ரகசியங்களை கண்டறிந்து மற்றவரோடு பகிர்ந்து கொள்வார்கள். இவர்களே சாஸ்திரங்களையும் உபநிஷதங்களையும் உண்டாக்கியவர்கள். ரிஷிகள் மந்திர தரிசனத்தை பெற்றவர்கள். ஒவ்வொரு தெய்வீக மந்திரமும் ஒரு குறிப்பிட்ட ரிஷிக்கு சம்பந்தமானது. உத்தரமீமாம்சை ஜெய் முனியால் நிறுவப்பட்டது இது கர்மத்தை உத்தமமாக கூறுகிறது. பூர்வ மீமாம்சம் வேதவியாசரால் படைக்கப்பட்டது இதில் ஞானமே பிரதானம் என்று கூறுகிறது. ஆகவே ஒவ்வொரு முனியும் அவர் அவர்களுடைய பிரதானமான குணத்தைப் பொருத்து அவர்களுடைய கருத்து தெரிவித்தனர். எனவே சாஸ்திரங்களில் வேறுபாடுகளைக் காணலாம்.
மகான்கள் பௌதிக வாழ்க்கையின் பிரதானமானவர். இவர்கள் தருமத்தை அனுசரித்து வாழ்க்கையில் பிரசித்தி பெற்றவர்.
சாமியார்கள் துவாபரயுகத்தில் பூஜாவிதானங்கள் சேவைகளுக்காக பயிற்சி பெற்றவர்கள் இவர்கள் கர்மகாண்டத்தை விமர்சனம் செய்வார்கள். இவர்கள் வாழ்க்கையும் இவ்வித வருமானத்தில் பலம் பெறும்.
குருமார்களுக்கு 3 நிலை உண்டு. முதல் நிலை குருமார்கள் கடவுளை வழிபடுவர் இவர்கள் கர்மத்தையும் தர்மத்தையும் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பார்கள். இவர்களுடைய தேவைக்காக கடவுளை அவர்கள் வணங்குவர். ஆகவே இவர்கள் கடவுளுக்கு கீழ்நிலை பெற்றவர்.
இரண்டாவது நிலை ஜகத்குரு மஹாயோகேஷ்வர், அல்லது பிரம்ம ஞானி எனப்படுபவர். இவர்களிடம் தெய்வீக சக்தியும் தெய்வீக திருஷ்டி மற்றும் தெய்வீக ஞானமும் பூரணமாக இருக்கும். ஆகவே இவர்கள் கடவுளுக்குச் சமமானவர். "அஹம் பிரம்மாஸ்மி" என்று பிரகடனம் செய்வார்கள்.
மூன்றாவது நிலை சந்து மதத்தை சேர்ந்த சத்குரு அவர்கள் ஆவார். சத்குரு மெய்ஞானத்தையும் பௌதிக ஞானத்தையும் தெய்வீக ஞானத்தையும் அடைந்தவர்கள். இவர்களையே உண்மை மற்றும் மாயை தத்துவங்களை அறிந்தவர்கள் என்று கூறுவார்கள். அல்லது நிலையான நித்தியமான சத்தியத்தை அறிந்தவர்கள் என்று கூறுவார்கள்.(பகீ 2.16) ஆகவே அவர்களுடைய ஞானம் நான்கு உலகத்தை சேர்ந்தது. நான்காவது உலகம் அழியும் தத்துவத்தால் ஆனது இல்லை. நான்காவது உலகம் நிரந்தரமானது. உண்மையான சத்குரு தன்னுடைய சக்தியால் தன்னிடம் சரணடைந்தவரை மாயை மனத்தில் இருந்து விடுதலை செய்தது சத்யா லோகத்துக்கு அனுப்புவார். ( ப கீ 4.34 &8.20–21).
ஒரு உண்மையான சத்குரு கடவுளுக்கும் மேன்மையானவர் என்று கபீர் கூறுகிறார், அவர் கடவுளை வணங்கவும் மாட்டார் வெறுக்கவும் மாட்டார். கடவுள் ஆன்மாவை மனதை கொண்டு தேகத்தில் சிறையடைத்து கர்மம் மற்றும் தர்மம் இவைகளால் கட்டுண்டு பிறப்பு இறப்பு சூழலில் பலமுறை வலம்வர செய்கிறார். ஆனால் ஒரு சத்குரு ஆன்மாவை மன மாயையில் இருந்து விடுதலை செய்து அமர நிலையை அடைய உதவுகிறார். எப்போது ஒருவர் ஒரு உண்மையான சத்குருவை பெறும் பாக்கியத்தை அடைகின்றனரோ அப்போது அவருடைய வாழ்க்கை பூரணமாகிறது.
சாமியார்கள் : ஏதுமற்ற நிலையில் ஒரு போலி ஒப்பனையுடன் அன்றாடம் ஜீவனும் செய்பவர்கள்
பி.கு., : பொதுவாக இவைகள் கடந்த காலத்தை போல அந்தந்த சொல்லுக்குரிய அந்தஸ்தோடு இல்லை. இன்று எல்லாமே ஒன்றுக்குள் ஒன்றாக பல்வேறு வகையில் திரிந்து போலிகளே அதிகம்…

No comments: