Saturday, July 4, 2020

அழுகை

ராஜஸ்தான் மாநிலத்தில் ருத்தஆளி என்ற ஒரு இனம் உண்டு , இவர்களை இறந்த வீட்டில் அழுவதற்காக அழைப்பார்கள், அவர்கள் எவ்வாறு அழவேண்டும் என்றல் சுற்றி இருக்கும் அனைவரும் இறந்தவரை பார்த்து அழுவதை விட இவர்கள் அழுவதை பார்த்து அழுபவர் அதிகமாகவும் தத்ரூபமாகவும் அழவேண்டும்
எத்தனை பேர் இதை பார்த்து அழுகின்றார்களோ அதற்கேற்ற படி பணம் கொடுப்பார்கள், இந்த இனத்தை சார்ந்த பெண்ணிடம் ஒருவர் எப்படி இப்படி உங்களால் அழ முடிகிறது , யாரோ இறந்ததற்கு பணத்திற்காக செயற்கையாக ஆழ முடியுமா ? என்று கேட்டதற்கு அந்த பெண் சொன்னால் -",நானும் செயற்கையாக அழ வில்லை நான் சிந்தும் ஒருவொரு கண்ணீருக்கும் என் ஓவ் ஒரு விம்மலுக்கும் என் ஓலத்திற்கு பின்னால் "எங்கள் இனம் எங்களை இந்த சாதி கலாச்சாரத்தில் வலுக்கட்டயமாக பயன் படுத்தும் உயர் சாதி, எங்களின் வாழ்கை முறை , எங்கள் குழந்தைகள் எதிர்காலம், எங்கள் உண்மையான கண்ணீர் கூட போலி, நடிப்பு என்று பேசும் ஊர் மக்கள், இவை அனைத்தும் ஒன்று பின் ஒன்றாக மனதில் தேங்கி எனக்காக நான் அழுவதை போலி என்று கூறும் இந்த சமுதாயம் ஒரு பிணத்தின் முன்னாள் அழுவது தான் உண்மை என்று நம்பும் போது எனக்காக நான் கண்ணீர் சிந்தும் உன்மையான தருணம் இது தான், பலநாள் நான் அழுவதை பிணத்தின் முன் நான் அழுவதற்கு எடுத்து கொள்ளும் ஒத்திகை என்று சிரித்துவிட்டு போவார்கள் என்று கூறி விட்டு அழ ஆரம்பித்தாள் !
சரி உங்கள் கேள்விக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் , உண்டு எப்படி உலோகத்து உலோகம் , உருகுநிலை மாறுபாடு கிறதோ அதை போன்று தான் சகிப்பு தன்மை அதை தங்க முடியாமல் உங்கள் கண்ணீர் வெளிப்பாடும் ஏற்பாடுகிறது சிறு விஷயமா , இல்லை தாங்க முடியாத தூக்கமா என்பதை உங்கள் மனது தீர்மானிக்கிறது பலவிதமான மனா அழுத்தத்தின் வெளிப்பாடு தான் கண்ணீராக வெளிப்படுகிறது , ஒரு பலூன் நிறய நீர் நிரப்பி ஒரு சிறு ஊசி கொண்டு துளை இட்டால் அதில் நீர் கசிவு எவ்வளவு நேரம் நீடிக்கும் அதை போட்டு உடைக்கும் போது நீர் மொத்தமாக வெளியேறினாலும் மனது லேசாகிவிடும் "நீங்கள் இன்று சிந்தும் கண்ணீர் , இன்று நடந்த சிறு விஷயம் ஒரு நிரம்பிய தொட்டியில் கொஞ்சம் மழை பெய்வது போல !
சற்று உளவியல் ரீதியாக பார்த்தால்
இதைப்போன்று ஒரு மனநிலை ஏற்பட , மரபியல் ,வளர்ந்த சூழ் நிலை அல்லது வளர்ந்த விதம் காரணமாக இருக்கலாம் ஒரு பெண் இரண்டு அண்ணன்கள் உடன் வளர்க்க பட்டிருந்தால் அந்த பெண் நடந்துகொள்ளும் விதம் சற்று ஆண்களை போலவும் , இரண்டு பெண்களுடன் வளர்த்த ஆண் சற்று பெண்கள் போலவும் நடந்துகொள்வதற்கு காரணமாக அமையலாம் அல்லது தங்கள் பெற்றோர்கள் இடம் இருந்து , அவர்களை பிரதிபலிக்கும் செயல்முறை இதில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு
சரி இதை தீர்ப்பதற்கு வழி உங்கள் குறைகளை ஒருவரிடம் சத்தமாக வெளிப்படையாக கூறுங்கள் , யாரிடம் , எப்படி ? நிறைய நேரங்களில் நான் கூறியதே எனக்கு வினையை தேடி தந்து இருக்கிறது ! உண்மை தான் .
மரப்பாச்சி பொம்மை , கேள்வி பட்டு இருப்பீர்கள் , இதனுடன் விளையாடி , தூங்கி , அதற்கு சோறு ஊட்டி , திருமணம் செய்துவைத்து , என அந்தக்காலத்தில் இந்த பொம்மைகளிடம் , பேசி தன் தேவைகளை கேட்டு என்று குழந்தைகள் விளையாடுவார்கள் , இதில் உன்மையில் மிக பெரிய அறிவியல் தத்துவம் உள்ளது .
"என்ன செய்வது நான் சொன்ன சிரிச்சிடுவிங்க"
Addison Wesley என்பர் எழுதிய The Pragmatic Programmer: From Journeyman to Master என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார் (Rubber Ducking)
சரி மனிதனிடம் கூறவேண்டாம் ஒரு ரப்பர் வாத்து பொம்மை / டெடிபேர் / நாய் பொம்மை /எது உங்களுக்கு பிடிக்குமோ (பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதா ?)
சாப்ட்வேர் துறையில் உள்ள ப்ரோக்ராமர் அல்லது கோடிங் (coding ) எழுதுபவர்களுக்குக்கு தங்களை அறியாமல் சில தவறுதல் நடந்து இருக்கும் அதை உரக்க இந்த பொம்மை வாத்து இடம் (Line by Line) விளக்கம் கூறுவார்கள் அப்படி கூறும்போது அவர்கள் தவறை அவர்கள் புரிந்துகொள்ள முடியும், சிறு வயதில் அம்மா சொல்லுவாங்க சத்தம் போட்டு படி என்று, சற்று விளக்கமாக கூறினால் ,
உன்னிகிருஷ்ணன் பாடலை நீங்கள் மனதிற்குள் பாடுவதற்கும் , உங்கள் குரலில் வாய்விட்டு படுவதற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கும் என்பது உங்கள் குரலை நீங்கள் கேட்டால்தான் தெரியும், அதை போல் இந்த வாத்திடம் பேசும்போது உங்களுக்கும் கேட்கும், ஆம் இந்த முறை மனிதர்களிடம் கூறுவதை கட்டிலிலும் சிறப்பானது பாதுகாப்பானது ஏனென்றால்
1. நீங்கள் பேசும் போது குறுக்கில் ஏதும் பேசாது
2. உங்க விஷயசத்தை கேட்கறதுனால அதுக்கு வருத்தம் வராது
3. உங்க ப்ரச்சனை அந்த வாத்து மத்தவங்களுக்கு சொல்லாது
4. உங்க வாத்து நீங்க எப்போ பேசணும் நெனச்சாலும் தனக்கு நேரம் இல்லைனு சொல்லது
Rubber Ducking இதை முயற்சி செய்து பாருங்கள் , அப்படி உங்கள் நிலை சரியாகவில்லை என்றல் , உங்கள் நண்பரிடம் கூறுங்கள் பின்பு எது மிக கடினமாக இருந்தது என்று நீங்களே ஒரு தாளில் வரிசைப்படுத்துங்கள் ஒருவேளை ரப்பர் வாத்திடம் கூறிய சில விஷயங்களை மறைக்க நேரிடலாம் ...!
"இவ்வளவு பெரிய கதை சொல்லி இருக்கேன் கொஞ்சம் சிரிக்கலாம் இல்ல !

No comments: