Saturday, May 30, 2020

குண்டலினி சக்தி உயிருக்கு ஆபத்தா?

தியானம் என்றால் என்ன என்பதற்கு ...
ஆன்மிக வளர்ச்சி என்பது நாம் குண்டலினி சக்தியை, மூலாதாரத்திலிருந்து ஒவ்வொரு சக்கரமாக கடந்து தலையின் உச்சியில் உள்ள சஹஸ்ரஹாரம் என்னும் சக்கரத்தை அடைவதாகும்.
பொதுவாக ஆன்மிகத்தில் ஒருவர் ஈடுபடுகிறார் என்றால் முக்கியமாக அவர் முக்தியடைய முயற்சிக்கிறார் என்று அர்த்தம்.
பொதுவாக, அனேகமாக அனைவருக்கும் தலை உச்சியை அடைந்த குண்டலினி சக்தி கபாலத்தை பிளந்து வெளியேறிவிடும். சில விதிவிலக்கு உண்டு அதை கடைசியில் விவரிக்கிறேன்.
பெரும்பாலும் அனைவருக்கும் குண்டலினி சக்தியானது தலையை அடைந்தவுடன், உடலில் இருந்து உயிர் பிரிந்து முத்தி ஏற்படும்.
இது தான் கபால மோட்சம், முக்தி. பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பிறவா நிலை.
பொதுவாக இதை செய்பவர் ஒரு ஆன்மிகவாதியாக இருப்பார். உடல் படுத்த நிலையில் இல்லாத வகையில் கபாலத்தில் வழியாக குண்டலினி சக்தி வெளியேறினால், அதன் பின்னர் உடல் சரிந்து விடும்.

விதிவிலக்கு பற்றிய தகவல்கள்.
முன்னரே கூறியது போல பெரும்பாலான நபர்களுக்கு தலையை அடைந்த குண்டலினி சக்தி அடுத்த கணமே தலையைப் பிளந்து கொண்டு வெளியேறிவிடும்.
நம் கலாச்சாரத்தில் சில யோகிகளுக்கு அவர்களது கடைசி காலத்தில் குண்டலினி சக்தியானது கபாலத்தில் இருந்து வெளியேறாத வண்ணம் சில தடங்கல்கள் ஏற்படுவது உண்டு.
அச்சமயத்தில் தடங்கலை நிவர்த்தி செய்யும் வண்ணம் அவரது தலையில் தேங்காயை உடைத்து தடங்கல்களை நீக்கி உள்ளார்கள். அதன் பின்னர் கபால மோட்சம் எளிதாக நடந்தேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகத்தில் உள்ள சிலர் அவர்கள் உலகத்தில் செய்ய வேண்டிய ஆன்மிக பணிகள் எஞ்சி இருந்தால் இவ்வாறு குண்டலினி சக்தி தலையில் அடைந்த பின்னரும் அதை உடனடியாக வெளியேறாத வண்ணம் அவர்கள் அதன் மீது ஒரு முழுக் கட்டுப்பாடு கொண்டு வருவார்கள்.
குண்டலினி சக்தியானது தலையை பிளந்து வெளியேறாத வண்ணம் இருப்பதற்கு பல விதமான தொழில்நுட்பங்கள் இருக்கிறது.
முன்னர் இது தொடர்பாக நான் எழுதிய ஒரு பதிலில் இருந்து சில பகுதிகளை இங்கே மறுபடியும் தருகிறேன்.
முன்னர் நம் நாட்டில் உள்ள முனிவர்களின் படங்களை கவனித்திருக்கிறீர்களா ? தலை உச்சியில் ஒரு கொண்டை போட்டு இருப்பார்கள்.
ஆன்மிக சாதனை செய்பவர்கள் அவர் சக்திநிலையை கீழே உள்ள சக்கரமான மூலாதாரத்திலிருந்து தலை உச்சிக்கு சகஸ்ரஹாரம் கொண்டு சென்ற பின்னர் அவர்களுடைய சக்தி சகஸ்ரஹாரம் வழியாக வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது அதை முக்தி அல்லது சமாதி என்போம்.
கபால மோட்சம் என்றும் குறிப்பிடுவது உண்டு. நம் கலாச்சாரத்தில் இப்படி யாரோ ஒருவர் ஆன்மிகமாக கபால மோட்சம் அடைந்து விட்டார் என்றால் விவரம் தெரிந்தவர்கள் தலை உச்சியில் ஒரு சிறு துளை உள்ளதா அதன் வழியாக அந்த சக்தி வெளியேறி உள்ளதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்வார்கள்.
ஆன்மிகமாக இப்படி கபால மோட்சம் அடைவதற்காக பயிற்சி செய்யும் யோகிகள், முனிவர்கள் தங்களது சக்தி தலை உச்சிக்கு வந்து விட்டால் அதை உடனடியாக வெளியேறாத வண்ணம் தடுத்து தாங்கள் இன்னும் கொஞ்ச காலம் வாழ்வதற்காக தங்கள் வாழ்நாளை நீட்டிக் கொள்வார்கள்.
இன்னும் சொல்லப்போனால் யோக வழியில் ஆன்மிகமாக பலமுறை பல ஜென்மங்களாக வந்தவர்கள் இவ்வகை வழிகளில் நிபுணத்துவம் அடைந்து தாங்கள் செய்யும் பணி இன்னும் கொஞ்சம் காலம் வரை தொடர்ந்து செய்வதற்காக தங்களுடைய உயிரை நீட்டித்துக் கொள்வார்கள்.
அவர்கள் உயிரை நீட்டிப்பதற்கு பலவகையான வழிமுறைகளை கையாள்வார்கள்.
  1. முடி இருப்பின் தலையில் உச்சிக்குடுமி அல்லது கொண்டை போட்டுக் கொள்வார்கள்.
  2. முடி இல்லாத பட்சத்தில் தலையில் ஒரு துணியின் மூலமாக தலைப்பாகை போன்ற அமைத்து கொள்வார்கள்.
  3. வள்ளலார், ஆதிசங்கரர் போல தலையில் துணியை ஒருவகையாக போட்டுக் கொள்வார்கள்.
  4. இந்து மதத்தைத் தவிர மாற்று மதத்தினர்கள் பொதுவாக வெள்ளை நிறத்தில் தொப்பி அணிந்து கொள்வார்கள்.
  5. உடம்பில் ஏதாவது உலோகம் இருந்தாலும் உயிர் சக்தி பிரியாது. இதன் காரணமாக தான் நம் கலாச்சாரத்தில், பெண்களுக்கு அணிகலன்கள் அணிவித்தார்கள். உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பதால், அதீத உணர்ச்சி வசப்பட்டு, சந்தோஷம் / துக்கம் ஏற்பட்டு அவர்கள் உடலிலிருந்து உயிர் பிரிவதை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. மேலும் குறிப்பிட்ட வடிவத்தில் அணிகலன்களை வடிவமைத்தார்கள் அவர்கள் நலம் பெறும் நோக்கத்தில். இன்று காலவெள்ளத்தில் ஏன், எதற்கு என்ற பல விவரங்கள் தெரியாமல் வேறு காரணங்களுக்காக அணிந்து வரப்படுகிறது.
ஆன்மிகத்தில் நம் உடலில் இருந்து பிராண சக்தி ஐம்புலன்கள் மூலமாக வெளியேறி கொண்டிருக்கிறது. ஆன்மிக பயிற்சியில் முக்கியமான ஒன்று இந்த விரையமாகும் சக்தியை தடுத்து நிறுத்துவதும் ஒன்றாகும்.
இந்த சக்தி விரயத்தை நாம் ஒரு சோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்மீகத்தில் நம் உடலில் இருந்து பிராண சக்தி ஐம்புலன்கள் மூலமாக வெளியேறி கொண்டிருக்கிறது. ஆன்மீக பயிற்சியில் முக்கியமான ஒன்று இந்த விரையமாகும் சக்தியை தடுத்து நிறுத்துவதும் ஒன்றாகும்.
இந்த சக்தி விரயத்தை நாம் ஒரு சோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
ஆமாம், உங்கள் யூகம் சரியானதுதான் ஒரு உருத்திராட்சத்தின் மூலமாக.
தலைவிரி கோலமாக உள்ள ஒரு பெண்ணின் கூந்தலில் இந்த ருத்ராட்சத்தை நாம் சோதித்தோமானால் அதன் சக்தி விரயமாகுவதை உணர்த்தும் விதமாக வலமாக சூழலும்.
அதே பெண்ணின் தலையில் ஒரு கொண்டையோ அல்லது தலை பின்னல் செய்தால் சக்தியானது விரையமாவது தடுக்கப்படும். அப்படி உள்ள கூந்தலில் நாம் ருத்ராட்சத்தை வைத்து சோதித்தால் இப்பொழுது சக்தி நிலையில் மாற்றம் ஏற்பட்டு ருத்ராட்சம் சூழலில் ஒரு அசைவற்ற தன்மை இருக்கும்.
எங்க வீட்டுப் பெண்களின் கூந்தலில் இதை சோதித்து அவர்களுக்கு இதை விளக்கியுள்ளேன்.
அதனால்தான் நம் கலாச்சாரத்தில் பெண்களுக்கு ஏற்படும் சக்தி விரயத்தை தவிர்க்கும் வண்ணம் தலைவிரிகோலமாக இருக்கக்கூடாது குறைந்தபட்சம் தலையின் நுனியில் சிறு முடியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என்று வயதானவர்கள் இளம் தலைமுறைக்கு இதை போதித்து பல தலைமுறைகளுக்கு இந்த கருத்தை கடத்தியுள்ளார்கள்.

No comments: