பாட்டி
வைத்தியம்
இன்று நாம் எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய
நிலைமையில் உள்ளோம் சாதரண தலைவலி வந்தால் மருத்துவரிடம் ஓடுகிறோம் அங்கு அவர் கண் பரிசோதனை, நரம்பு பரிசோதனை என சாதாரண தலைவலிக்கு 1000 ரூபாய் செலவு வைத்து விடுகிறார்கள். அடுத்த நாள் தானாக அத்தலைவலி தீர்ந்து விடும். நம் வீட்டில் நாம் உண்ணும் உணவில் உள்ளது நமக்கான நோயை குணப்படுத்தும் ஆற்றல் இதைத்தான் நாம் பாட்டி வைத்தியம் என்று கூறுகிறோம்.
பாட்டி வைத்தியத்தால் பல நோய்கள் குணமாகின்றன ஒரு எல்லையை தாண்டியபின் மருத்துவமனைக்கு செல்லலாம். நம் வீட்டுப்பொருட்கள் என்ன நோய்க்கு என்ன சாப்பிடலாம் என்று சில பொருட்களை தொகுத்து உள்ளேன். இன்னும் நிறைய பொருட்கள் உள்ளன அந்த தகவல்கள் எல்லாம் சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்....
உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்.
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்.
ருசியின்மையைப் போக்குபவை
புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி.
சிவப்பணு உற்பத்திக்கு
புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை.
மருந்தை முறிக்கும் உணவுகள்
அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்.
விஷத்தை நீக்கும் உணவுகள்
வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை.
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
வாய் தூர்நாற்றம்
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.
தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
விக்கலை நிறுத்த
ஒரு கரண்டி சர்க்கரை வாயில் போட்டு சுவையுங்கள் பறந்து போகும் விக்கல்.
ஒரு கரண்டி சர்க்கரை வாயில் போட்டு சுவையுங்கள் பறந்து போகும் விக்கல்.
இஞ்சி
மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

No comments:
Post a Comment